** மத்திய துணை ராணுவப்படை & டில்லி காவல் துறையில் சப் - இன்ஸ்பெக்டர் பணிகள்; காலியிடங்கள்: 1,330; Online: 2/4/2018 ** ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிகள்; காலியிடங்கள்: 83;  8/5/2018 ** ராணுவத்திற்கு பெரம்பலூரில் நேரடி ஆட்சேர்ப்பு; Online: 25/3/2018 ** நபார்டு வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் பணி; காலியிடங்கள்: 92; Online: 2/4/2018 ** UGC-NET தேர்வு - 2018; Online: 5/4/2018  ** ISRO -வில் டெக்னீஷியன் பணி; காலியிடங்கள்: 78; Online: 2/4/2018 ** தமிழக அரசில் அசிஸ்டென்ட் இன்ஜினியர் பணிகாலியிடங்கள்: 324; Online: 26/3/2018  ** CISF- ல் டிரைவர் பணி; காலியிடங்கள்: 447; Online: 19/3/2018 ** AIIMS -ல் நர்சிங் பட்டதாரிகளுக்கு வேலை; காலியிடங்கள்: 755; Online: 8/4/2018 **

About - Employment Service


அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தை வகிக்கும் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டப் பிரச்சினை இன்றளவும் தீர்க்க முடியாத ஒன்றாக தொடர்ந்து வருகிறது. இருந்தபோதிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்கள் படித்து முடித்த உடன் வேலை கிடைத்துவிடும் என்ற கற்பனையுடன் கூடிய நம்பிக்கையில் கல்வி பயின்று பட்டம் / பட்டய சான்றிதழ் பெற்றவுடன் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விடுகின்றனர், வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்?

மத்திய / மாநில அரசு துறைகளில் வேலையில் சேர வேண்டுமானால் அதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். மத்திய அரசு துறைகளுக்கு தேவையான பணியாளர்கள் Union Public Service Commission, Staff Selection Commission ஆகிய தேர்வாணயங்கள் நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழக அரசு துறைகளுக்குத் தேவையான பணியாளர்கள் TNPSC தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேக்கு தேவையான பணியாளர்கள் Railway Recruitment Cell - கள் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலமும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் Clerk , Probationary Officer பணிகளுக்கு IBPS தேர்வுகள் மூலமும் தேவையான ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது தவிர மத்திய / மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்கள் அந்தந்த நிறுவனங்கள் நடத்தும் போட்டி தேர்வுகள் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

எனவே அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலையில் சேர வேண்டுமானால் அதற்கான போட்டித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். போட்டித் தேர்வு பற்றிய விளம்பரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்படுகிறது. ஆங்கிலத்தில் 15 முதல் 30 பக்கங்களில் வெளியிடப்படும் வேலைவாய்ப்பு செய்திகளை முழுமையாய் படித்து புரிந்துகொள்ளும் திறன் படித்த இளைஞர்களிடம் இருக்கிறதா என்ற கேள்விக்கு எதிர்மறையான பதிலே கிடைக்கிறது. அப்படிப்பட்ட இளைஞர்கள் எளிதில் படித்து புரிந்துகொண்டு வேலைவாய்ப்புகளுக்கு உடனே விண்ணப்பிப்பதற்கு தூண்டுகோலாய் விளங்கி வருகிறது எம்பிளாய்மெண்ட் சர்வீஸ் தமிழ் வார இதழ் .

10 ஆம் வகுப்பு முதல் Ph.D வரை படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய/ மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அறிவிக்கப்படும் வேலைவாய்ப்பு செய்திகளை எளிய தமிழில் முழுமையாக முந்தி தருவதில் எம்பிளாய்மெண்ட் சர்வீஸ் நம்பர் 1 இதழாக கடந்த 14 வருடங்களாக திகழ்ந்து வருகிறது. வேலைவாய்ப்பு செய்திகளோடு மத்திய, மாநில அரசு உயர்க்கல்வி நிலையங்களில் வழங்கப்படும் சிறப்பு படிப்புகள் பற்றிய செய்திகள் மட்டுமின்றி போட்டித் தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகளை வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. அரசு துறை வேலைவாய்ப்புகளோடு தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளும் வெளியிடப்படுகிறது.

திறமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் படித்த படிப்புக்கான வேலை நிச்சயம் கிடைக்கும் என்பதை வாசகர்களுக்கு உணர்த்துவதோடு, கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு தகவல்களையும் எம்பிளாய்மெண்ட் சர்வீஸ் முந்தி தருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.